'தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை தரவில்லை என்பது தவறான பிரச்சாரம்' - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Update: 2022-05-09 05:23 GMT

தமிழகத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை தரவில்லை என்பது தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் துக்ளக் பத்திரிகையின் விழா கொண்டாடப்பட்டது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது: ஜி.எஸ்.டி. கவுன்சில் இருக்கக்கூடிய அத்தாரிட்டி முடிவு எடுத்தது என்னவென்றால், 2020ல் நமது கலெக்ஷன் குறைச்சலா போகுது. வந்த கேப்ப ஒவ்வொரு வருஷமும் மாநில அரசுகளுக்கு கொடுத்து வருகிறோம்.

அந்த பணத்தை கொடுக்கும்போது முதல் ஆண்டு 2020ல் கடன் வாங்கி ஒவ்வொரு மாதமும், எல்லாருக்கும் கொடுத்தோம். கடந்த 2022ம் ஆண்டு வரையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை வழங்கப்பட்டு விட்டது. தமிழகத்திற்கு கொடுக்கவில்லை என்பது தவறான பிரச்சாரம். இவ்வாறு மத்திய நிதியமைச்சர் கூறினார்.

Source: Twiter

Image Courtesy: Times Of India

Tags:    

Similar News