தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி நிதியை விடுவித்த மத்திய அரசு!
தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு 10வது தவணையாக ரூ.9,871 கோடி பற்றாக்குறை நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கு மட்டும் ரூ.183.67 கோடி கிடைத்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு 10வது தவணையாக ரூ.9,871 கோடி பற்றாக்குறை நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கு மட்டும் ரூ.183.67 கோடி கிடைத்துள்ளது.
15வது நிதிக் குழு பரிந்துரையின் படி தகுதி வாய்ந்த சுமார் 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை நிதியை மாதம், மாதம் தவணைகளாக விடுவிப்பது வழக்கம்.
அதே போன்று தற்போது 10வது தவணையாக தமிழகம், அசாம், ஆந்திரா, ஹரியானா, கர்நாடகா, கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடி வருவாய் பற்றாக்குறை நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்திற்கு ரூ.1836.67 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source:Dinamalar