மதபோதனை என்ற பெயரில் மன்மத லீலை! 19 வயது இளம்பெண்ணை, அவரது தாயே பலபேருக்கு தாரைவார்த்த கொடுமை!
மதபோதனை என்ற பெயரில் வீடு எடுத்து தங்கி, 19 வயது இளம்பெண்ணை, அவரது தாயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது சம்பவம் கன்னியாகுமரியில் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.டி மங்காடு பகுதியில், லால் ஷைன் சிங் என்ற மத போதகர் தனியாக வீடு எடுத்து தங்கி மதபோதனை செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதியில் பிரபலமானவராக அறியப்படுகிறார்.
சமீப காலமாக அவரது வீட்டுக்கு சொகுசு கார்களில் பல இளம் பெண்களும், ஆண்களும் வருவதும், போவதுமாய் இருந்துள்ளனர். இது அப்பகுதி மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கட்டத்தில் மத நம்பிக்கையை வைத்து, பல்வேறு அத்துமீறல் நடப்பதை அப்பகுதி மக்கள் உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து மதபோதனை என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில் அங்கு சோதனை நடத்தியதில், 19 வயது இளம்பெண் உட்பட 7பெண்களும், ஆண்களும், அரைகுறை ஆடைகளுடன் அறைகளில் பிடிபட்டனர். இதில் 19வயது பெண்ணை அவரது தாயே பாலியில் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை கைது செய்த நித்திரவிளை காவல்துறையினர், அவர்களது சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.