ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு!
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களில் இதுவரை ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு அவை அனைத்தும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை கூறியுள்ளது.

இது குறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை ஆக்கிரமித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: Dinamalar
Image Courtesy: DT Next