திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் கிரிவலத்திற்கு அனுமதி!

Update: 2022-03-16 04:43 GMT

திருவண்ணாமலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னர் வைரஸ் தொற்றை தடுப்பதற்காக தடுப்பூசி போடும் பணியானது தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் காரணமாக தொற்று பரவல் வேகம் குறைந்தது.

அதே போன்று இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது. இதனால் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் கூறியது. ஆனால் தமிழகத்தில் குறிப்பிட்ட கோயில்களுக்கு சில கட்டுப்பாடுகளை திமுக அரசு விதித்தது. அதில் திருவண்ணாமலை கோயிலும் ஒன்றாகும். பௌர்ணமி தினத்தில் கிரிவலம் செல்வது ஒவ்வொரு பக்தர்களின் நேர்த்தி கடனாகும். ஆனால் அதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், கிரிவலம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கிரிவலம் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மனநிம்மதியை அளித்துள்ளது.

Source, Image Courtesy: News J

Tags:    

Similar News