என் மண் என் மக்கள் யாத்திரையின் முதல் கட்ட நிறைவு.. விரைவில் 2-ம் கட்டம்.. மாஸ் காட்டும் அண்ணாமலை..
தமிழக மக்களின் பெரும் ஆதரவுடன் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி என் மண் என் மக்கள் என்ற யாத்திரை பயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் ராமநாதபுரத்தில் வெகு விமர்சியாக தொடங்கினார். இந்த யாத்திரை தொடக்க விழாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மக்கள் அலைக்கடலாக திரண்டு வந்து இந்த யாத்திரையில் கலந்து கொண்டு வருகிறார்கள். அண்ணாமலை அவர்களின் முதல் கட்ட நடை பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது. இனி இரண்டாம் கட்ட நடை பயணம் ஆலங்குளத்தில் அடுத்த மாதம் நடைபெறும் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அண்ணாமலை அவர்களின் யாத்திரை மகள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.இ ந்நிலையில் முதற்கட்டம் சிறப்பாக நிறைவடைந்து இருக்கிறது. இரண்டாம் கட்டம் அடுத்த செப்டம்பர் மூன்றாம் தேதி தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாக இருக்கிறது. மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் ஊழலுக்கு எதிராக போராடும் ஒரு யாத்திரை பயணமாக இந்த என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் யாத்திரை பயணத்தை அண்ணாமலை அவர்கள் முன்னெடுத்து சிறப்பாக நடத்தி வருகிறார்.
சென்ற இடமெல்லாம் இவருக்கு சிறப்புகள் சேர்ந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில் முதற்கட்ட யாத்திரை அமோக ஆதரவுடன் மக்கள் மத்தியில் நிறைவு பெற்றது. இரண்டாம் கட்ட யாத்திரை விரைவில் நடைபெறும் அதற்கான புதிய தகவல்களையும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News