தி.மு.க அமைச்சர்களின் வருகைக்காக 2 மணிநேரம் மொட்டை வெயிலில் காத்திருந்த பள்ளி மாணவர்கள்! 5 மாணவர்கள் மயக்கம்!

Update: 2022-08-12 07:49 GMT

விழுப்புரம்: தமிழக அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக, பள்ளி மாணவர்கள் இரண்டு மணி நேரம் வெயிலில் அமர வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த ஓராண்டாக தி.மு.க அரசு மக்களிடம் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அரசின் அனைத்து துறைகளும் சரிவர இயங்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


இந்நிலையில் விழுப்புரத்தில், பள்ளி மாணவர்களுக்கு 'போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி' ஏற்பாடு செய்யப்பட்டது, அந்நிகழ்ச்சிக்கு தமிழக அமைச்சர்களான பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர்.


இதற்காக விழுப்புரம்  மாவட்டத்திலுள்ள பள்ளிகளிலிருந்து இரண்டாயிரத்திற்கும் அதிகமான  மாணவர்கள் நிகழ்ச்சிக்கு அழைத்துவரப்பட்டனர். நீண்ட நேரமாக மைதானத்தில்  மாணவர்கள் கொளுத்தும் வெயிலில் அமைச்சர்களின் வருகைக்காக காத்திருந்தனர். இதனால் 5 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அதன்பின் இரண்டு மணிநேரங்கள் கழித்து அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர்.


"எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் பள்ளி மாணவர்களை அவதிக்குள்ளாக்குவது நியாயமல்ல, மாணவர்களின் நலன் கருதி அதற்கேற்றார்போல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

News J

Tags:    

Similar News