பிரதமரின் கரீஃப் கல்யாண் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து 2417 டன் கோதுமை தமிழகம் வந்தடைந்தது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பித்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால் மத்திய அரசு மூலம் பிரதம மந்திரி கரிப் யோஜனா திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு தலா 5 கிலோ கோதுமை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இத்திட்டத்தை இந்திய உணவு கழகம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்படி, திருச்சி மாவட்டத்திற்கு ரேஷன் கடைகள் மூலம், ஒரு கார்டுக்கு தலா 5 கிலோ வீதம் கோதுமை வழங்கப்படுகிறது. இதற்காக, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து 2417 டன் கோதுமை இரயில் மூலம் தமிழகம் வந்தடைந்தது.
பின்னர், தொழிலாளர்கள் மூலம் லாரிகளில் இறக்கப்பட்டு, பாதுகாப்பாக கோவை பீளமேட்டில் உள்ள உணவு சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.