விருதகிரீஸ்வரர் கோயிலில் திருடுபோன 3 கலசங்கள் மீட்பு!

Update: 2022-03-05 05:31 GMT

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தங்கம் முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருடுபோன நிலையில் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்து ஒரு மாதம்கூட முடிவடையாத நிலையில், கோயிலில் தங்கமுலாம் பூசப்பட்ட மூன்று கோபுரக்கலசங்கள் திருடுபோனது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்ததில், பெரியார் நகர், அமுதம் தெருவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோபுர கலசங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News