சேலத்தில் அதிர்ச்சி: 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் கருப்பசாமி சிலை அகற்றம்!

Update: 2022-04-15 12:37 GMT

சேலம் மாவட்டத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 7 வகையிலான மரங்கள் மற்றும் கருப்பசாமி சிலையை அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 7 வகையிலான மரங்கள் இருந்தது. அங்கு கருப்ப சாமி சிலை வைக்கப்பட்டிருந்தது. தினமும் ஏராளமான பொதுமக்கள் வழிப்பட்டு வந்த நிலையில் மரத்தையும், கருப்பசாமி சிலையையும் திடீரென்று அகற்றியுள்ளனர்.

இது பற்றி தகவல் கிடைத்த இந்து முன்னணி நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். இதன் பின்னர் மீண்டும் அங்கு கருப்பசாமி சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து வழிப்பட்டனர். இந்த சம்பவத்தால் சேலம், பனமரத்துப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக ஆட்சி அமைந்த பின்னர் இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News