மத்திய அரசின் 300 ஆம்புலன்ஸ்கள் எங்கே? தமிழக அரசை நோக்கிய கேள்வி.. மத்திய இணை அமைச்சர் எல் முருகன்..

Update: 2023-10-24 04:27 GMT

கோவை தமிழக அரசுக்கு கொடுத்த 300 ஆம்புலன்ஸை எங்கோ ஒளித்து வைக்கப்பட்டுள்ளது, திருப்பூர் மருத்துவமனையில் இருந்து வெளிவந்த சர்க்குலரை திரும்ப பெறவில்லை என்றால், மக்கள் முழுக்க  திமுக ஆட்சிக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். குறிப்பாக அந்த அறிக்கையில் இந்து மக்களின் முக்கிய பண்டிகையான சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜைக்கு ஊழியர்கள் தங்களுடைய அலுவலகத்தில் இதை கொண்டாடக்கூடாது எனவும், அதேபோன்ற பண்டிகையில் மஞ்சள், குங்குமம் போன்ற எந்த ஒரு பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என்றும் தமிழக அரசின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு பாஜக தலைப்பில் பல்வேறு கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன.


இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் தமிழ்நாட்டில் லியோ படம்  பல தடைகளை தாண்டி ரிலீஸ் ஆகி இருக்கிறது. கோவையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் எழுவதற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து இருக்கிறார்கள். நீதிமன்றம் என்ன தண்டனை கொடுத்துள்ளது? அவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டும். பயங்கரவாதிகளை பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டுமே தவிர, ஒட்டுமொத்த அரசியலாக பார்க்க கூடாது. ஜெய் ஸ்ரீ ராம் என்பது வெற்றியின் கோஷம், வெற்றிக்கான முழக்கம் இந்திய மக்களின் ஒட்டுமொத்த உணர்வாக அதில் இருக்கிறது. உதயநிதியும் இதை அரசியலாக பார்த்தார், அது அவருக்கு தோல்வியை தான். கொடுத்து இருக்கிறது திமுகவினர் தங்களுடைய அமைச்சர் அலுவலகத்திலும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அலுவலகத்திலும் அமர்ந்து கொண்ட அரசை ஆட்டி வைக்கிறார்கள். இதை நிலையாக அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.


மோடி அரசு தமிழக மின்வளத் துறைக்கு 1800 கோடி கொடுத்து இருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி படத்தை இங்கு மாட்ட தயங்குகிறார்கள். கால்நடை துறைக்கு சுமார் 300 ஆம்புலன்ஸ் கொடுத்து இருக்கிறோம், 100% மத்திய அரசின் நிதி பிரதமர் மோடியால் தமிழகத்திற்கு கிடைத்து இருக்கிறது ஆனால் ஆம்புலன்ஸ் வாகனத்தை வெளிவிடுவதன் மூலமாக கட்டாயம் மத்திய அரசின் பிரதமர் மோடியின் புகைப்படத்தை போட வேண்டும் என்பதற்காக அதை இங்கு ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்றும் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News