பள்ளி மாணவி விவகாரத்தில் சாட்டையை சுழற்றும் சி.பி.ஐ.! டெல்லிக்கு பறந்த 400 மெயில்கள்!
தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் கிறிஸ்தவர் நடத்தும் தூய இருதய மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு 12ம் வகுப்பு படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த 17 வயது மாணவி கடந்த மாதம் ஜனவரி 9ம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டர். அவர் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியத காரணத்தினால்தான் உயிரிழந்தார் என்று மாணவி பேசிய வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரிப்பதாக திமுக அரசு கூறியது. ஆனால் இதற்கு மாணவியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. எங்களுக்கு சிபிஐ விசாரணை நடத்தி உண்மையான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது.
இந்த வழக்கை எதிர்த்து திமுக அரசு டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தை அணுகியது. அங்கும் சிபிஐ விசாரிப்பதற்கு தடை இல்லை என கூறியது. இதனால் சிபிஐ முதற்கட்டமாக பள்ளி வார்டன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனது பணியை தொடங்கியது. இந்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு பின்னால் மத மாற்றம் செய்கின்ற கும்பலின் மிகப்பெரிய சதித்திட்டம் இருக்கலாம் என்கின்ற கோணத்தில் விசராணை செய்வதற்கு சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் இருந்து டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு இதுவரைக்கும் 400க்கும் அதிகமான இ மெயில்களில் புகார் சென்றுள்ளதாம். இதனால் சிபிஐ தற்போது மதமாற்றும் கும்பலுக்கு எதிராக தனது சாட்டையை சுழற்றும் என தெரிகிறது.
Source, Image Courtesy: Dinamalar