டில்லி மாடலுக்கு மாறும் 41 தமிழக அரசு பள்ளிகள் - மத்திய அரசின் கொள்கைகளை மறைமுகமாக ஆதரிக்கிறதா?

Update: 2022-09-01 13:32 GMT

தமிழகத்தில் உள்ள, 41 அரசு பள்ளிகள், டெல்லியில் உள்ள மாதிரி பள்ளிகள் போல மாற   உள்ளன. திமுக அரசு மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து வருகிறது. ஆனால், அதில் உள்ள பல முக்கிய அம்சங்கள், கொண்டு வந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில் வெவ்வெறு பெயர்களில் செயல்படுத்த உள்ளது. 

முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள, 41 அரசு பள்ளிகள் டெல்லி பள்ளிகளை போல மாற்றப்பட உள்ளன. 26 பள்ளிகள் தகைசால் பள்ளிகள்' என அழைக்கப்படும். மீதி  15 பள்ளிகள் மாதிரி பள்ளிகள் என்றும் அழைக்கப்பட உள்ளன.

ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சியின்போது மாதிரி பள்ளிகளாக இருந்த பள்ளிகளில் சில மாறுதல் செய்யப்பட்டு, அவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.  இதற்கான துவக்க விழா, வரும், 5ம் தேதி சென்னை பாரதி மகளிர் கல்லுாரியில் நடக்கிறது. டெல்லி முதல்வர் கலந்து கொள்கிறார். 

மத்திய அரசு நடத்தும் 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவு தேர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கேற்ற பாடத்திட்டங்கள் உள்ளன. தேசிய கல்வி கொள்கையில் அமைந்துள்ள தேச பக்தி பாடத்திட்டமும் அமல்படுத்தப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம், முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றபோது, அங்குள்ள பள்ளிகளை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Input From: Dinamalar 

Similar News