இந்த கொரோனா நோய் காலத்தில் மக்கள் அவதிபட்டு வரும் நிலையில், பா.ஜ.க வை சேர்ந்த அண்ணாமலை தொடர்ந்து அவரால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று அவர் அரவக்குறிச்சியில் உள்ள கிராமப்புற மக்களின் பயன்பாட்டிற்காக 5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்.
ஏற்கனவே அண்ணாமலை இந்த கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு மலிவு விலையில் காய்கறிகளை கொடுத்துள்ளார், சிங்காநல்லூர் ESI மருத்துவமனை கொரோனா நோயாளிகளின் உறவினருக்கு ஒரு வாரமாக இரவு இலவசமாக உணவு வழங்கி வருகிறார். இந்த வரிசையில் அவர் அரவக்குறிச்சி கிராமத்தில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு 5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளார்.
இது குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது "அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள கிராமப்புற மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் பயன்பாட்டிற்காக 5 ஆக்ஸிஜன் கான்சென்ட்ரேடர்களை கீழ்கண்ட மருத்துவமனைகளுக்கு கொடுத்தோம். என்னுடன் கரூர் மாவட்ட தலைவர் அண்ணன் சிவசாமி அவர்களும், பாஜக கட்சி நண்பர்களும் உடனிருந்தனர். அரவை அரசு மருத்துவமனை - 2, ஆரம்ப சுகாதார மையம் மலைக்கோவிலூர் - 1, Dr.கனகராஜ், பிரகாஷ் மருத்துவமனை சின்னதாராபுரம் -1, Dr.முரளிதரன் வெங்கடேஸ்வரா மருத்துவமனை வேலாயுதம்பாளையம் -1" என்று அவர் கூறினார்.