கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 5வது, 6வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் தொடக்கம்!

Update: 2021-06-29 14:29 GMT

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகளை ரஷ்யாவின் உதவியுடன் 2013 ஆம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது கூடங்குளம் அணுமின்நிலைய வளாகத்தில் 5 மற்றும் 6 வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்குகின்றன. 


இந்த அணுமின் நிலையத்தில் அமைந்துள்ள முதல் அணு உலையில்  2014 ஆம் ஆண்டும், 2-வது அணு உலையில்  2016 ஆம் ஆண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகளை கடந்த 2016 ஆம் ஆண்டு பாரத பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர். தற்போது 5 மற்றும் 6-வது அணு உலைகளை அமைப்பதற்கான நில அகழ்வு பணிகள் முடிவடைந்துள்ளன.  இதனைத்தொடர்ந்து கட்டுமான பணிகளைத் தொடங்க இந்திய அணுசக்தி கழகம் முடிவு செய்துள்ளது.


இந்த நிலையில், கூடங்குளம் அணுமின்நிலைய வளாகத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்குகின்றன. தொடக்க நிகழ்வில் ரஷ்ய மற்றும் இந்திய அணுசக்தி கழக உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். புதிதாக அமைக்கவுள்ள இந்த 2 அணு உலைகள் மூலம் கூடுதலாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News