தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான பக்தி தலங்களில் ஒன்றாக திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலை சுவாமி திருக்கோவில் விளங்குகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு செல்கின்றனர். அதுமட்டுமல்ல அது மாதம் தோறும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த கோவிலுக்கு வருகை தருவார்கள்.
இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்த்து குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்ய வைப்பதாக பக்தர்களிடம் சில இடைத்தரகர்கள் ஈடுபடுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது தொடர்கதையாகி உள்ளது. இதனால் கட்டணம் செலுத்தி வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இந்து சமூக அறநிலையத்துறை சார்பில் கட்டண தரிசனத்திற்கு 50 ரூபாய் தற்போது வரை வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது முன்னறிவிப்பு ஏதும் இன்றி, கோவில் நிர்வாகம் சுவாமி காணிக்கை வரவு என நபர் ஒருவருக்கு ரூ.500 விதம் வசூலிக்கப்படுகிறது. முறையான அறிவிப்பு ஏதும் இல்லாமல் தடாலடியாக கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Input & Image courtesy: News