ஓசூரை சுற்றி 6 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பதற்கு நடவடிக்கை: திருத்தொண்டர்கள் சபை தலைவர் தகவல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 6 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Update: 2021-12-13 10:31 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 6 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஓசூரில் உள்ள இந்து கோயில்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்த விவரங்களை திருத்தொண்டர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக ஆய்வுகளை மேற்கொண்டார். இதனிடையே ஆய்வு பணியின்போது ஓசூர் அருகே உள்ள பாகலூர், துள்ள கூலிகானப்பள்ளி கிராமத்தில் 26 ஏக்கர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை விவசாய குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலத்தின் வழியாக கல்குவாரிக்குச் செல்ல லாரிகள் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவது தெரியவந்ததால் 2 லாரிகளை பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிக்கப்பட்டவைகளை மீட்டு கொண்டு வருவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. அதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 5வது முறையாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைத்து கல்குவாரிக்கு சென்ற லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில மிக விலை உயர்ந்த நிலங்கள் அனைத்தும் ஓசூரில் மட்டும்தான் உள்ளது. சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Hindu Tamil

Image Courtesy:Vastushastram


Tags:    

Similar News