தமிழக அரசு பேருந்துகளில் 6.6 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் - கொரோனா பரவல் அதிகமாகுமா?
கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்த நிலையிலும் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வர முடியவில்லை.
ஆகையால் முக்கிய வல்லுனர்களுடன் நடத்திய நீண்ட ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது என்று தமிழக அரசு இரண்டு தினங்களுக்கு முன் அறிவித்தது. இதனால் வெளி ஊருக்கு செல்லும் நபர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டி வந்தனர்.
இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததது. இதன் மூலம் நேற்று மாலை வரை 6.60 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊருக்கு பணம் செய்து உள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 65,746 பேர் இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலை மிகவும் அதிகமாக பரவி பல உயிர்களை பறித்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் கொடுப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று கேள்விகள் எழுப்பப்படுகிறது. தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியிருந்தது நம் அனைவரும் அறிந்ததே. அரசாங்கம் இதை சரியாக திட்டமிட்டு மக்களுக்கு பேருந்துகளின் செல்லும் பயணத்தை நேரம் வாரியாக முறைப்படுத்தி இருந்தால் இந்த மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி இருக்கலாம். அரசாங்கத்தின் இந்த செயல் கொரோனாவின் இரண்டாவது அலையை முறியடிக்குமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் .