'அம்பேத்கர் ஆசையை 70 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவேற்றியவர் பிரதமர் மோடி' - இளையராஜாவுக்கு ஆதரவாக ஹெச்.வி.ஹண்டே!
அம்பேத்கர் விரும்பியதை சுமார் 70 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவேற்றி காட்டியவர் பிரதமர் மோடி என்று, இளையராஜாவின் கருத்துக்கு ஆரவாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹெண்டே அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் இளையராஜா பிரதமர் மோடி குறித்து ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அதாவது அம்பேத்கரின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருவதாக கூறினார். இதற்கு தி.மு.க., தி.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பா.ஜ.க. இளையராஜா கருத்துக்கு ஆதரவாக நின்றது.
இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே 94, இளையராஜாவுக்கு ஆதரவாக கருத்தை வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இசைஞானி திரு. இளையராஜா அவர்கள், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களுடன் பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களை ஒப்பிட்டு பேசியதில் எந்த தவறும் இல்லை. 1949&ல் காஷ்மீர் மாநிலத்திற்கு 370வது சாசனத்தின் மூலம் தனி அந்தஸ்து கொடுப்பதற்காக. திரு. ஷேக் அப்துல்லா அவர்கள், சாசன வரைவுக் குழுத்தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்களை அணுகினார்.
அம்பேத்கர் விரும்பியதை 70 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றி காட்டியவர் பிரதமர் மோடி..
— Raja Shanmugasundaram (@SRajaJourno) April 25, 2022
இளையராஜாவுக்கு ஆதரவாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே (94) அறிக்கை pic.twitter.com/Y1AU1S3FUm
இச்செயலைக் கண்டித்து டாக்டர் அம்பேத்கர் அவர்கள், ஷேக் அப்துல்லா அவர்களிடத்தில் ''பிரதமர் பண்டித் நேரு அவர்களுக்கு நீங்கள் தவறான யோசனைகளை கூறிக் கொண்டு வருகிறீர்கள். காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கொடுப்பதன் மூலமாக, அந்த மாநிலத்தில் எந்த தொழிற்சாலைகளும் வராது. வேலை வாய்ப்புகள் அறவே நீங்கி விடும்.