ஆண்டுகளுக்கு ரூ.75 கோடி வினாத் தாள் கட்டணம்.. தமிழக மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப் படுகிறதா?
தற்போது தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்காக வினாத்தாள் அச்சடிப்புக்காக 6 முதல் 8 ஆம் வகுப்புக்கு ரூ.50 முதல் ரூ.70, 9 to 10 வகுப்புக்கு ரூ.70 முதல் ரூ.110, மேல்நிலையில் ரூ.100 முதல் ரூ.150 வரை ஒவ்வொரு மாணவரிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே மாணவர்களிடம் வினாத்தாள் அச்சரிப்பதற்காக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தினமலர் தன்னுடைய செய்தி பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது. இந்த ஒரு தகவல் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கல்வி அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கல்வி அதிகாரிகள் சிலர் வினாத்தாள் அச்சடிக்கும் பொறுப்பை அரசியல் பின்னணியில் கொண்ட தனியார் நிறுவனங்களுக்கு சப் காண்ட்ராக்ட் வாரியாக விடுவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த காண்ட்ராக்ட் மூலம் ஆண்டுதோறும் வருமானமாக சுமார் 75 கோடி ரூபாய் வரை வினாத்தாள் கட்டணங்கள் ஆக மாணவர்களிடமிருந்து வசூலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால் இந்த ஒரு பிரச்சனைக்கு ஏற்கனவே தீர்வு காணும் வகையில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் மூலமாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பிரிண்டர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் பள்ளிகளின் மெயிலுக்கு வரும் வினாத்தாள்களை அந்த பிரிண்டர்கள் மூலமாக பிரிண்ட் போட்டு மாணவர்களுக்கு வழங்குவதற்கும் அரசு நிதி ஒதுக்கி இருக்கிறது இருந்தாலும் பல்வேறு கட்டணங்களை மாணவர்களிடம் வசூலிப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதில் வினாத்தாள் கட்டணம் பெரும் சுமையாக இருப்பதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றச்சாட்டு இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Dinamalar