தமிழகத்திற்கு வந்தடைந்த மேலும் 85,000 தடுப்பூசிகள்!

Update: 2021-06-10 12:52 GMT

தமிழகத்தில் அதிகமாக இருக்கும் பாதிப்புகளின் எண்ணிக்கை காரணமாக தமிழக அரசாங்கம் பல மாநிலங்களில் ஊரடங்கை தற்பொழுது போட்டு உள்ளது. சில மாநிலங்களில் இதில் தளர்வுகளும் செய்யப்பட்டு அமலில் உள்ளன. கொரோனா அதிகம் பதிவாகி வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாகவுள்ளது. ஆனால், தடுப்பூசி பற்றாக்குறையினால் கடந்த 4 தினங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக ஆர்வத்துடன் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


எனவே இத்தகைய தடுப்பூசி பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்பொழுதும் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து மேலும் 85 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்திற்கு வந்தடைந்தன. இதுவரை தமிழகத்துக்கு 1 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரத்து 960 தடுப்பூசிகள் வந்துள்ளன. நேற்று தடுப்பூசிகள் தமிழகத்திற்கு மத்திய அரசின் சார்பாக அனுப்பப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, 12,520 மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. அந்த தடுப்பூசிகள் அனைத்தும் நேற்று போடப்பட்டுவிட்டன. 


இதன் காரணமாக தடுப்பூசிகளின் தேவைகளும் மற்றும் போடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதன் காரணமாக தடுப்பூசி அதிகமாக தேவைப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்திற்கு இன்று மேலும் 85,000 டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. ஏற்கனவே மத்திய அரசு நேற்று 63,370 தடுப்பூசியும், இன்று 4,000 கோவேக்சின் தடுப்பூசியும் அனுப்புவதாக உறுதி அளித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Similar News