பிஷப் ஹீபர் கல்லூரி பாலியல் விவகாரம் : புகாரை திரும்ப பெற தி.மு.க M.L.A அழுத்தம்?

Update: 2021-07-23 01:30 GMT

திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறையின் தலைவராக பணிபுரிந்து வந்தவர் பால் சந்திரமோகன். இவர் அந்த கல்லூரியில் தமிழின் முதுகலை பட்டம் படித்து வந்த மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாக அந்த கல்லூரியின் தலைவரிடம், ஐந்து மாணவிகள் புகார் அளித்தனர். மேலும் இந்த ஐந்து மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் பால் சந்திரமோகன் கல்லூரியை விட்டு இடைநீக்கம் செய்யப்பட்டார்


அந்த மாணவிகள் அளித்த புகாரில் "தமிழ்த்துறையின் தலைமை ஆசிரியர் பால் சந்திரமோகன் எங்களிடம் மிகவும் நெருக்கமாக அமர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தார். மேலும் அவர் எங்களிடம் மிகவும் ஆபாசமான பாலியல் கருத்துகளை தெரிவித்து வந்தார். மேலும் தமிழ்துரையின் உதவி பேராசிரியராக பணிபுரியும் நளினி அவர்களும் இந்த ஆசிரியர் பால் சந்திரமோகனின் பாலியில் துன்புறுகளுக்கு உதவி புரிந்து வந்தார். அது மட்டுமின்றி அவரது அறைக்கு செல்லும் முன்பு அலங்காரம் (make up) செய்து கொள்ளுமாறு எங்களை வற்புறுத்தினார். பின்பு ஆசிரியர் பால் சந்திரமோகன் அவரது அறையில் எங்களது கால்களை உரசி பார்ப்பது போன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டார்." என்று அதில் கூறி இருந்தது.


மானிவர்கள் அளித்த பாகரின் அடிப்படையில் ஆசிரியர் பால் சந்திரமோகன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனை அடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையையும் காவல் துறையினர் மேற்கொண்டு வந்தனர்.


இவ்வாறு இருக்கையில் இந்த பாலியல் வழக்கில் திருச்சியை சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரின் தரப்பு தலையிட்டு வருகிறது என்று ஜுனியர் விகடனில் தகவல் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில் அந்த தி.மு.க எம்.எல்.ஏ தரப்பு ஆசிரியர் மீது புகார் அளித்த பெண்களிடம் வழக்கை வாபஸ் பெறுவது குறித்து பேரம் பேசி வருகிறது எனவும், ஆசிரியர் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகாரை திரும்ப பெறுமாறு அந்த பெண்களிடம் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஜூனியர் விகடன், இந்த வழக்கில் பெண்களை மிரட்டிய திருச்சியை சேர்ந்த அந்த தி.மு.க எம்.எல்.ஏ வை "இனிப்பு" எம்.எல்.ஏ என்று குறிப்பிட்டு இருந்தது.

யார் இந்த இனிப்பு எம்.எல்.ஏ என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News