பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யாவுக்கு மீண்டும் சம்மன்... நடந்தது என்ன?

Update: 2023-07-03 10:21 GMT

தமிழ்நாடு பா.ஜ.க.வின் மாநில செயலாளராக இருக்கும் SG சூர்யா அவர்களுக்கு சிதம்பர நகர காவல் நிலையத்தில் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு காவல்துறை சார்பில் சம்மன் ஒன்று அனுப்பப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் பாஜக மாநில செயலாளர் SG சூர்யா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தூய்மை பணியாளர் ஒருவரின் இறப்பிற்கு எந்த வகையில் பதில் கூற போகிறீர்கள்? என்பது தொடர்பான கருத்து ஒன்றை பதிவிட்டார்.


அதற்கு அவரை கைது செய்து சிறை வைத்தார்கள். தற்போது ஜாமின் வழங்கப்பட்டு, பாஜக மாநில செயலாளர் SG சூர்யா வெளியில் வந்துவிட்டார் இருந்தாலும் சமீபத்தில் ன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றே பகிர்ந்து இருக்கிறார். இதற்கு எதிராக தான் இவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேரில் ஆஜராக சிதம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டதாக புகார் வந்த நிலையில் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.


 "சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீட்சிதர்களை மிகவும் மோசமான முறையில் நடத்தியதாகவும், அவர்களை குற்றவாளிகளை போல சித்தரித்து கோவில் நிர்வாகத்திடம் அத்து மீறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவு காரணமாக தற்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் சம்மன் ஒன்றை அனுப்பி இருக்கிறார்கள். மேலும் சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.  

Tags:    

Similar News