தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்.!

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்.!

Update: 2021-02-20 15:38 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் இறுதி வாரங்களில் நடைபெறும் என தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளிவரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் வேகமாக ஈடுபட்டுள்ளது. இந்த முறை கொரோனா தொற்று இருப்பதால், வாக்காளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வசதியாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

மேலும், மாநிலத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
இதனிடையே தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

Similar News