தினமும் 10 மணி நேரம் படித்து முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் சாதித்த மாணவி.!

தினமும் 10 மணி நேரம் படித்து முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் சாதித்த மாணவி.!

Update: 2020-10-19 07:25 GMT

கடந்த மாதம் நடைபெற்ற NEET தேர்வு முடிகள் நேற்றுமுந்தினம் வெளியானது. இதில் சென்னையைச் சேர்ந்த மாணவி பயிற்சி மையத்திற்குச் செல்லாமலே வீட்டில் தினமும் 10 முதல் 12 நேரம் வரை படித்து, முதல் முயற்சியிலேயே தமிழ்நாட்டில் மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் மாணவி ஜி.சுவேதா.



மாணவி சுவேதா சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் அயனம் பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார். 2020 இல் நடைபெற்ற NEET தேர்வில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு இவர் 701 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 62வது இடத்தையும் மாநில அளவில் 3வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைத்த மாணவிக்கு வேலம்மாள் மெட்ரிகுலேசன் பள்ளியில் இருந்து பாராட்டுவிழா நடத்தப்பெற்றது. பள்ளியின் முதல்வர்கள் உமா மகேஸ்வரன், ராஜகோபாலன் இருவரும் இவருக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இதனை அடுத்து ஊடகத்துக்குப் பேட்டியளித்த மாணவி சுவேதா, தனது சிறுவயதில் முதலே மருத்துவர் ஆவதே கனவு என்று அவர் தெரிவித்தார். எனவே NEET தேர்வுக்காகப் பயிற்சி மையங்கள் எதுவும் செல்லாமல், பள்ளியிலிருந்து நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சிகள் மூலம் படித்து வந்தேன் என்று கூறினார்.

மேலும் வீட்டில் ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணிநேரம் படித்ததாகவும் அவர் கூறினார். இவரது முதல் முயற்சியிலே இவருக்குக் கிடைத்த வெற்றி மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பள்ளியில் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்றிருந்தால் இன்னும் அதிக மதிப்பெண் வந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

Similar News