கோகுல்ராஜ் கொலையில் 10 பேர் குற்றவாளிகள்: சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Update: 2022-03-05 06:41 GMT

பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என்று மதுரை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், அவர்களுக்கான தண்டனை விவரம் 8ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி கூறியுள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகாவை சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், இவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்து வந்தார். கடந்த 2015ம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ் ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இது தற்கொலை அல்ல கொலை என அவரது பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

Full View

இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸ், சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. அந்த வழக்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள்வசந்தம், செல்வகுமார், தங்கதுரை, சதீஷ்குமார், பிரபு என்கின்ற ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவர்களுக்கான தண்டனை விவரம் 8ம் தேதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News