தமிழக அரசின் அசத்தல் திட்டம்! ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 10 லட்சம் நிதியுதவி!

தமிழக அரசின் அசத்தல் திட்டம்! ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 10 லட்சம் நிதியுதவி!

Update: 2021-01-21 13:29 GMT

தமிழ்நாடு அரசாங்கம் இங்கு புதிதாக தொழில் தொடங்கும் ஸ்டார்ட்அப்களின் பண மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்து ஆதரிக்க விரும்புகிறது

புதுமை மற்றும் புதிய தொழில் தொடங்குவதற்கான பல்வேறு முயற்சிகளை ஊக்குவிக்கும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் (EDII-TN)  தமிழ்நாடு ஹெட்ஸ்டார்ட் அறக்கட்டளையுடன் இணைந்து தமிழக ஸ்டார்ட்டப் ஸீட் நிதி (TANSEED) 2021ஐ ஏற்பாடு செய்து வருகிறது.

TANSEED இன் மூலம் 10 புதிய ஸ்டார்ட்அப்களுக்கு, தலா 10 லட்சம் வழங்கப்படும். இந்தத் திட்டம் தற்போது ஆர்வமுள்ள ஸ்டார்ட்டப்களிடமிருந்து  இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. சில சுற்றுகளுக்கு பிறகு அவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். 

 2019 ஜனவரியில் தமிழக அரசு தொடக்க மற்றும் கண்டுபிடிப்பு கொள்கை 2018- 23ஐ அறிமுகப்படுத்தியது. கடந்த 3 ஆண்டுகளாக, தமிழக கண்டுபிடிப்புகள் சேலஞ்சை ஏற்பாடு செய்திருந்தது. தமிழக கண்டுபிடிப்பு சேலஞ் மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.

 மொத்தம் 16 ஸ்டார்ட் அப்களுக்கு ரூபாய் 5 லட்சம் வீதம் மானியம் வழங்கப்பட்டது. மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட அல்லது அல்லது தங்களுடைய கருத்தை ஆதாரத்துடன் தமிழகத்தில் பதிவு செய்ய தயாராக இருக்கும் தொழிலகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

 விண்ணப்பங்கள் முடிவு செய்யப்பட்டு, மூன்று நாள் பூட்கேம்ப் குழுக்களுக்கும், மெண்டார்களுக்கும் இடையே நேருக்கு நேர் விவாதம் அமையும். அதன்பிறகு குழுக்கள் உருவாக்கப்பட்டு அடுத்த சுற்றுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட் அப்கள், தங்களுடைய தொழிலை எடுத்து விளக்குவார்கள். 

அதற்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் வாரியாக 10 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படும். இந்த விண்ணப்பங்கள் கான கடைசி தேதி ஜனவரி 25 ஆகும்.

Similar News