100 ஆண்டு கனவு திட்டம்.. காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம்.. அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
100 ஆண்டு கனவு திட்டம்.. காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம்.. அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
விவசாயிகளின் 100 ஆண்டுகள் கனவு திட்டமான காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
100 ஆண்டுகால விவசாயிகளின் கனவு திட்டமான இதற்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் 6 மாவட்ட விவசாயிகளான விருதுநகர், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 ஆயிரம் ஹெக்டேர் பாசன நிலங்கள் பயன்பெறு என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.