தஞ்சை 1035வது சதய விழாவிற்கு பக்தர்கள் அனுமதி?

தஞ்சை 1035வது சதய விழாவிற்கு பக்தர்கள் அனுமதி?

Update: 2020-10-23 16:29 GMT

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவில் பங்கேற்க பக்தர்கள் குறைந்த அளவே அனுமதிக்கப்படுவர் என்றும் 2 நாள் நடைபெறும் இந்த விழா தற்போது ஒருநாள் மட்டுமே நடைபெறும் என்றும் சதய விழா குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

















உலகப் புகழ்பெற்ற விளங்கும் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால் அவரது பிறந்தநாளை சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு 1035 சதய விழா வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

சதய விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், வீதிஉலா என தஞ்சாவூர் நகரமே விழாக்கோலம் பூண்டு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இது போன்ற நிகழ்ச்சிகள் ஏதுமில்லாமல் 26ஆம் தேதி காலை 6 மணிக்கு மங்கல வாத்தியங்களுடன் விழா தொடங்கி 6:30 மணிக்கு கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கி 9:15 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பின்னர் மதியம் ஒரு மணிக்கு தீபாராதனை தருமபுரம் ஆதீன மடம் சார்பில் நடைபெற உள்ளது. இரவு 8 மணிக்கு சுவாமி புறப்பாடு கோயில் வளாகத்தில் நடைபெறும். இந்த ஆண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்களை குறைந்த அளவே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக 2 நாள் நடைபெறும் இந்த சதய விழா இந்த ஆண்டு ஒருநாள் மட்டும் நடைபெறும் என்று அறிவித்திருப்பது பக்தர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும் நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கு விழாக்குழு எடுத்திருக்கும் இதுபோன்ற நடவடிக்கை மக்களின் நலனுக்காகவே என்று அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Similar News