சென்னையில் பணத்திற்காக பள்ளி மாணவியை கடத்திய மொஹசினா பர்ஹீன், இஜாஸ் அகமது கைது!

Update: 2022-04-08 11:39 GMT

சென்னையில், 10ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியை ரூ.10 லட்சத்திற்கு கடத்திய மொஹசினா பர்ஹீன் மற்றும் இஜாஸ் அகமதுவை சாதுர்யமாக கைது செய்து மாணவியை பத்திரமாக மீட்டுள்ளனர்.

சென்னை, கோடம்பாக்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரின் மகள் ஆயிரம் விளக்கு பைக்ராஸ் கார்டன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். அதே போன்று மதியம் அடையாளம் தெரியாத ஒரு பெண் மாணவியை ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். இதன் பின்னர் பேருந்து ஓட்டுநர் மாணவியை காணவில்லை என்று பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் மாணவியின் தந்தைக்கு போன்று செய்த கடத்தல் பெண், உனது மகளை விடவேண்டும் என்றால் ரூ.10 லட்சம் உடனடியாக கொடுக்க வேண்டும் என்று கூறி செல்போனை துண்டித்துள்ளார். இதனால் பயந்து போன மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை தொடர்ந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அது மட்டுமின்றி மாணவியின் தந்தைக்கு அழைப்பு விடுத்த செல்போன் நம்பரை போலீசார் டிராக் செய்தனர். அப்போது செல்போன் சென்னை நகரை சுற்றி வருவதை உணர்ந்தனர். இதன் பின்னர் கடத்தல் பெண் கூறிய பணம் இல்லாததால் ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு மாணவியின் தந்தை வடபழனி 100 அடி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் எதிரில் உள்ள ஒரு கடையில் பணத்தை கொடுத்துவிட்டு மகளை அழைத்து செல்ல வேண்டும் என்று பெண் கூறியுள்ளார்.

அதே போன்று மாணவியின் தந்தை கடையில் பணத்தை கொடுத்துவிட்டு வடபழனி சிக்னல் அருகில் நின்றிருந்த மகளை அழைத்து வந்துள்ளார். அப்போது மீண்டும் பணத்தை வாங்குவதற்காக சென்ற கடத்தல் பெண் மொஹசினா பர்ஹீனை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த இஜாஸ் அகமதுவையும் போலீசார் கைது செய்தனர்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News