12 சிலைகள் மீட்கப்பட்டதில் ஹைலட் ராவணனின் சிலைதான்: என்ன ஸ்பெஷல் தெரியுமா!

Update: 2022-01-12 06:57 GMT
12 சிலைகள் மீட்கப்பட்டதில் ஹைலட் ராவணனின் சிலைதான்: என்ன ஸ்பெஷல் தெரியுமா!

பதினொன்றாம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முந்தைய சோழர் காலத்தில் இருந்த 9 சிலைகள் உட்பட ரூ.40 கோடி மதிப்பிலான 12 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர். அதில் பார்வதி சிலை, கிருஷ்ணர் மற்றும் நடராஜர் சிலை என 12 சிலைகளை போலீசார் மீட்டுள்ளனர். அதிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ராவணன் சிலைதான். பார்ப்பவர்களின் கண்கள் அனைத்தும் ராவணன் சிலை மீதுதான் உள்ளது.

இந்நிலையில், முதன் முறையாக 10 தலைகளைக் கொண்ட ராவணன் சிலையை, தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர். இச்சிலையை தொல்லியல் துறையினர் மிகவும் அதிசிறப்பு மிக்க சிலை என்று குறிப்பிட்டுள்ளனர். அதில் என்ன ஸ்பெஷல் என்று பார்த்தால், தனது சிந்தையெல்லாம் சீதையை ஏற்றிவைத்த ராவணனின் தீராக்காதலை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பத்துத்தலை இராவணனின் பத்துத் தலைகளிலும் சீதை நிறைந்திருப்பது போன்று சிற்பமாக வடிவமைத்துள்ளனர்.

தமிழகத்தில் ராவணனுக்கு என்று தனியார் கோயில் இல்லை. ஆனால் வட மாநிலங்களில் கோயில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது மீட்கப்பட்டுள்ள ராணவனின் சிலையின் உயரம் 27 செ.மீ.தான் உள்ளது. பல கோடி ரூபாய் அளவுக்கு இதன் மதிப்பு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அந்த சிலையில் சீதை தூங்குவது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News