12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை எப்போது.? தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 12 வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கப்படுவதற்கு முன்பாக 15 நாட்களுக்கு முன்பே தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 12 வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கப்படுவதற்கு முன்பாக 15 நாட்களுக்கு முன்பே தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.
இதனிடையே 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் 3ம் தேதி தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.