போலீஸ் பொய் சொல்றாங்க.. 2 வருஷமாக மதமாற்றம் செய்ய துன்புறுத்தியுள்ளனர்?மாணவியின் தாய் பரபரப்பு பேட்டி!
அரியலூர் மாவட்டம், வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் 47, இவருக்கு 17வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை உள்ளார். அவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்க வைத்திருந்தார். மேலும், மாணவி மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கியே படிக்கும் சூழ்நிலை இருந்தது.
இதனிடையே விடுதியில் மாணவிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டதால் முருகானந்தம் தனது மகளை வீட்டிற்கு அழைத்து சென்றார். இதன் பின்னர் உடல்நிலையில் மாற்றம் ஏற்படவே உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரியில் அனுமதித்துள்ளார். அப்போது தன்னை பள்ளி விடுதியில் மிகவும் கொடுமைப்படுத்தினர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி நான் பூச்சி மருத்து குடித்தேன் என்று மருத்துவர்களிடம் மாணவி கூறியுள்ளார். இதன் பின்னர் மாணவி கடந்த 19ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் மரணத்திற்கு மதமாற்றமே காரணம் என்று அவரது தந்தை முருகானந்தம் மற்றும் பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவியின் தற்கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இன்று மாலை 5 மணியளவில் காவல்துறை திருவையாறு துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் லாவண்யாவின் பெற்றோரை அழைத்து சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை செய்தார்கள் விசாரணை முடிந்து வெளியே வந்து செய்தியாளரிடம் லாவண்யாவின் பெற்றோர் அளித்த வாக்குமூலம்.... pic.twitter.com/2YYmkMmwvW
— தங்க.கார்த்திக் சோழகர் BJP (@BJP58632181) January 21, 2022
இந்நிலையில், திருவையாறு டி.எஸ்.பி., மாணவியின் பெற்றோர்களை விசாரணைக்கு அழைத்து சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளார். இதன் பின்னர் வெளியில் வந்த மாணவியின் தாயாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். எதனால் மாணவி உயிரிழந்தார் என்று அதற்கு அவரது தாய் கூறும்போது, எனது பெண்ணை மதமாற்றம் செய்ய தூண்டியதால் மைக்கேல் பள்ளிக்கும் எனக்கும் சற்று வாய்தகராறு ஏற்பட்டது. இதன் பின்னர் பொங்கல் விடுமுறை வந்ததால் அப்புறம் டீசி வாங்கி எனது பெண்ணை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற அஜாக்கிரதையாக இருந்து விட்டோம் என்றார்.
மேலும், மதமாற்றம் செய்ய சொன்னதால் மாணவி உயிரிழந்தாரா என்று கேள்வி எழுப்பினர். அப்போது போலீசார் கூறுவது பொய், எனது பொண்ணு பேசின வீடியோ ஆதாரம் இருக்கு. எனவே மதமாற்றம் செய்ய கடந்த 2 ஆண்டுகளாக துன்புறுத்தியுள்ளதால் எனது பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்ற தோணியில் பேசினார். மாணவியின் உயிரிழப்பு அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தமிழக பாஜக ஏற்கனவே கூறியுள்ள நிலையில் தற்போது மாணவியின் தாய் போலீசார் சொல்வது பொய் என கூறியுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
Source, Image Courtesy: Twiter