12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்: அரசு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!
வாக்கு எண்ணும் நேரத்தில் அரசு ஆசிரியர்கள் பெரும்பாலானோர்கள் பள்ளிக்க வரமுடியாது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள்.
அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் அனைத்து மாணவர்களிடமும் எழுந்தது. இதனிடையே திட்டமிட்டப்படி வருகின்ற மே 3ம் தேதி தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்திருந்த நிலையில், மே 2ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்கு எண்ணும் நேரத்தில் அரசு ஆசிரியர்கள் பெரும்பாலானோர்கள் பள்ளிக்க வரமுடியாது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள். அதற்கு அடுத்த நாளான மே 3ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு நடைபெறுகிறது. அப்போது ஆசிரியர்கள் பலர் பள்ளிக்கு வரமுடியாத சூழல் உருவாகும் என்று அரசுத்தேர்வுத்துறை எண்ணியது. அது மட்டுமின்றி கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் திட்டமிட்டப்படி தேர்வு நடத்தப்படுமா? என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில், மே 3ம் தேதி நடைபெறுவதாக இருந்த 12ம் வகுப்பு, மொழிப்பாடம் தேர்வு மட்டும் மே 31ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிற தேர்வுகள் அட்டவணையில் அறிவித்தபடி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.