12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும்.. தேர்வுத்துறை அறிவிப்பு.!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற மே மாதம் 3ம் தேதி திட்டமிட்டப்படி தொடங்கும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Update: 2021-03-04 10:21 GMT

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற மே மாதம் 3ம் தேதி திட்டமிட்டப்படி தொடங்கும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இதனிடையே கொரோனா தொற்று குறைந்த பின்னர் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முழுமையான பாடங்கள் நடத்தப்படவில்லை என்று மாணவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.


 



மேலும் 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் போன்று தங்களையும் தேர்ச்சி செய்ய வலியுறுத்தி வந்ததையும் பார்க்க முடிந்தது. இதனிடையே மாணவர்கள் நலன் கருதி பாடங்கள் குறைக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போன்று பாடங்கள் நடத்தப்பட்டது.

இந்நிலையில், மே 3ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி மே 21ம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டது.


 



ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அதே போன்று வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் மாணவர்கள் நலன் கருதி மே 3ம் தேதி தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News