12ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு செய்ய 10 பேர் கொண்ட குழு.!
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது குறித்து முடிவு செய்வதற்கு குழு அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்ணை கணக்கீடு செய்வதற்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு, சிபிஎஸ்இ பரிந்துரைகளையும் பரிசீலனை செய்யும் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது குறித்து முடிவு செய்வதற்கு குழு அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், தற்போது 10 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 12ம் வகுப்பு மாணவர்களுக்க மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மதிப்பெண் குறித்து ஆய்வு செய்து அரசிடம் அளிக்கும் என கூறப்பட்டுள்ளது.