12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு 16ம் தேதி தொடக்கம்.!

மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 16ம் தேதி முதல் செய்முறைத் தேர்வு தொடங்குகிறது.

Update: 2021-04-09 05:16 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் மிகவும் தாமதமாக தொடங்கியது. இதனிடையே மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் தேர்வுகள் தள்ளிப்போகுமா என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவலை அடைந்திருந்தனர்.

இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 16ம் தேதி முதல் செய்முறைத் தேர்வு தொடங்குகிறது.


 



ஆய்வகங்களில் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஆய்வகம், ஆய்வகப் பொருட்களை, கிருமிநாசினியால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்கள் கிருமிநாசினி பயன்படுத்திய உடனேயே, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

மேலும், கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே திட்டமிட்டப்படி அடுத்த மாதம் மே 3ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு துவங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Similar News