வாட்ஸ் அப் மூலம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகு, திருப்பத் தேர்வுகள்.!
12ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ‘வாட்ஸ் அப்’ மூலம் அலகு, திருப்பத் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று 4 மாவட்டத்தை சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
12ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு 'வாட்ஸ் அப்' மூலம் அலகு, திருப்பத் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று 4 மாவட்டத்தை சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மட்டும் ஒரு சில வாரங்கள் பள்ளிகள் செயல்பட்டது. பின்னர் தொற்று மீண்டும் அதிகமானதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 12ம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடக்கும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் மாணவர்களின் கற்றலில் தொய்வு ஏற்படக்கூடாது என்ற கருத்தின் அடிப்படையில், அலகுத் தேர்வு மற்றும் திருப்பத் தேர்வுகள் நடத்த அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அத்துடன் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, மேற்கண்ட அலகுத் தேர்வுகள் 17ம் தேதி முதல் ஜூன் 18ம் தேதி வரை நடத்த வேண்டும் எனவும், திருப்பத் தேர்வுகள் ஜூன் 21ம் தேதி முதல் 29ம் தேதிவரை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும். இத்தேர்வில் 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வுகள் நடக்கும் நாளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து வாட்ஸ் ஆப் மூலம் கேள்வித்தாள் அனுப்பி வைக்கப்படும்.