மனு அளித்தும் மெத்தனமாக இருந்த தி.மு.க. அரசு: மண்ணுக்குள் புதைந்த 13ம் நூற்றாண்டு கோயில்!

Update: 2022-05-19 06:23 GMT

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ளது மேலப்பார்த்திபனூர் என்ற கிராமம். அங்கு கி.பி. 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பட்டீஸ்வர முடைய அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோயிலின் ஸ்பெஷல் என்று சொன்னால், ஒவ்வொரு கல்லை தட்டினால் ஒவ்வொரு விதமான ஓசை எழுப்பும். நாட்கள் கடந்து செல்ல, செல்ல கோயில் மண்ணுக்குள் புதையுண்டது. தற்போதைய நிலையில், மேல் கூரை பகுதி மற்றும் தரை மட்டத்தில் காணப்படுகிறது.

இக்கோயிலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தி.மு.க. அரசு கோரிக்கை விடுத்தனர். காலம் கடந்த பின்னர் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அக்கோயிலை புனரமைக்க மாநில திருப்பணி ஆலோசனைக்குழு உத்தரவின் பேரில் கோயிலை சுற்றி தோண்டும் பணி நேற்று (மே 18) தொடங்கியது. சுமார் எட்டு அடி வரை தோண்டப்பட்டது. அப்போது மண்ணுக்குள் புதையுண்டு காணப்பட்ட பகுதிகள் வெளியில் தெரியவந்தது.

இக்கோயில் மூலஸ்தானத்தில் பட்டீஸ்வரமுடைய அய்யனாரும், கோயில் வெளி பிரகாரத்தில் அமைக்கப்பட்ட நந்தி சிலையும், உள்பிரகாரத்தில் விநாயகர், வராகி அம்மன் சிலையும் உள்ளது. மேலும், கோயில் தோண்டி எடுக்கப்பட்டதும் தொல்பொருள் துறையினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னர் திருப்பணிகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்பணியை கோயில் தக்கார் முருகானந்தம் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News