1.5 கோடி கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு.!

தற்போது, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-04-28 06:34 GMT

தமிழகத்தில் முதற்கட்டமாக 1.5 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று முதன் முதலில் அறிவித்த மாநிலம் தமிழகம்தான். கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.




 


தற்போது, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று வரை 55.51 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனிடையே வருகின்ற மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு அறிவித்தவாறு, இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.




 


முதற்கட்டமாக 1.5 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாடு மருத்துவப பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News