விடிய, விடிய மழை: டெல்டாவில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் இடிந்தது - கண்டுகொள்ளுமா அறநிலையத்துறை?

டெல்டாவை விடிய, விடிய மழை பெய்ததால் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் மேற்கூரை இடிந்து விழுந்தது.

Update: 2022-10-13 01:32 GMT

டெல்டா விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக மயிலாடுதுறை அருகே 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் கோவில் மேற்கூரை மற்றும் மண்டப சிமெண்ட் காரைகள் இடிந்து விழுந்தது. வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை வரும் 13ம் தேதி வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று விடிய, விடிய இரவு வரை மழை பெய்தது. குற்றாலம் அருகே வலுவருலூரில் வழு ஊரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் கோவிலில் இரண்டாம் ராஜராஜன் உள்ளிட்ட மன்னர்கள் காலத்தினை சேர்ந்த கோயில் அமைந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த கோவில் தான் தற்போது இடிந்து விழுந்தது. பழமை வாய்ந்த இந்த கோயிலில் உள்ள கால சம்ஹாரமூர்த்தி சன்னதியின் மேற்கூரை மண்டப சிமெண்ட் காரைகள் நேற்றுமுன்தினம் இரவு திடீரென இடிந்து விழுந்தது.


இந்த கோவிலில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பக்தர்கள் தற்போது அச்சத்தில் இருக்கிறார்கள் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் ஐந்தாயிரம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ள குறுகிய கால குருவை நெல்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் வயல்களில் தண்ணீர் தங்கி நிற்கிறது.

Input & Image courtesy: Dinakaran News

Tags:    

Similar News