சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 16 டாக்டர்கள், 4 செவிலியர்களுக்கு கொரோனா!

சென்னையில் கொரோனா பெந்தொற்றின் வேகமாக அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த வாரத்தில் தொற்று பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று (ஜனவரி 5) ஒரே நாளில் 2 ஆயிரத்து 481 பேருக்கு தொற்று பரவியுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Update: 2022-01-06 13:25 GMT

சென்னையில் கொரோனா பெந்தொற்றின் வேகமாக அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த வாரத்தில் தொற்று பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று (ஜனவரி 5) ஒரே நாளில் 2 ஆயிரத்து 481 பேருக்கு தொற்று பரவியுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும், சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் குடிசை பகுதியில் ஏராளமானோர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி 55வது வார்டில் மிண்ட் மருத்துவமனை குடியிருப்பில் 14 பேருக்கும், ஏழு கிணறில் 13 பேருக்கும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றும் 2 டாக்டர்கள் 14 பயிற்சி மருத்துவர்கள், 4 செவிலியர்கள் ஆகியோர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

Image Courtesy:The Hindu

Tags:    

Similar News