பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,221 சிறப்பு பேருந்துகள்.. தமிழக அரசு அறிவிப்பு.!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,221 சிறப்பு பேருந்துகள்.. தமிழக அரசு அறிவிப்பு.!
வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு மக்கள் செல்வது வழக்கம். அது போன்றவர்கள் சென்னையிலிருந்து செல்வதற்கு வசதியாக தமிழக அரசு அதிகளவில் சிறப்பு பேருந்துகளை இயக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ரயில்கள் பெருமளவு இயக்கப்படாமல் குறிப்பிட்ட அளவிற்கு மட்டும் சென்று வருகிறது. இதனால் பயணிகள் அதிகளவு பேருந்து பயணத்தை நம்பியே உள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறுகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை தினசரி இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,078 பேருந்துகள் என 3 நாட்களுக்கும் மொத்தமாக, சென்னையில் இருந்து 10,228 பேருந்துகளும், பிற மாவட்டங்களில் இருந்து மூன்று நாட்களுக்கு 5,993 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 16,221 பேருந்துகள் இயக்கப்படும்.
மீண்டும் பண்டிகை முடிந்த பின்னர் சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்வதற்காக 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை 15,270 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பயணிகள் ஆன்லைனில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கும் தமிழக போக்குவரத்துறை ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.