பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் சிற்பம்: தமிழ் எழுத்துக்கள் கல்வெட்டுக்களுடன் கண்டுபிடிப்பு!

பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப் பட்டு இருக்கிறது.

Update: 2023-03-08 00:59 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கால் பகுதியை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் சுந்தர் என்பவர் தான் தற்பொழுது இந்த ஒரு நடுகல் சிற்பத்தை கண்டுபிடித்து இருக்கிறார். தங்கள் ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக தகவல் கொடுக்கப்பட்டது. சிவகங்கை அரசு மகளிர் கலை கல்லூரி வரலாற்று பிரிவு விரிவுரையாளர் மற்றும் பாண்டிய நாட்டு பன்னாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் பேராசிரியர் முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் லட்சுமண மூர்த்தி மற்றும் பலரும் இந்த ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள்.


இதில் ஒரு விவசாயி உடைய நிலத்தில் பாதி மண்ணில் புதைந்த நிலையில் கி.பி 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுக்கள் வீரன் சிற்பம் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. இது சங்க காலம் முதல் இன்று வரை தமிழர் பண்பாட்டில் இருக்கும் நடுகல் வழிபாட்டு முறை ஆகும். குறிப்பாக நடுகல் என்பது பொருள் இறந்த வீரர்களின் நினைவாக வைக்கப்படும் வீரம் பேசும் நினைவுகள். குறிப்பாக பெருந்திரை விளக்கி மாண்டுபோன வீரர்களுக்காக எடுக்கப்படும் நினைவுக் கல்லாகும். விவசாயி நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த நடுகல் சிற்பம் 3 அடி உயரமும், இரண்டு அடி அகலமும், 12 சென்ட் தனி பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.


குறிப்பாக இது பற்றி அவர்கள் கூறுகையில் சிற்பத்தின் மேல் பகுதியில் நீண்ட வடிவில் பெரிய எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு தேர்ந்த நிலையில் காணப்பட்டு உள்ளது. இந்த கல்வெட்டை மை படி எடுத்து ஆய்வு செய்த பொழுது எழுத்துக்கள் தேய்மானத்தோடு காணப்பட்டதால் ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் உதவியுடன் இது படிக்கப்பட்டது. கல்வெட்டின் கடைசி வரி பெற்றான் என்று வரி மட்டும் வாசிக்க முடிந்தது. மற்ற எழுத்துக்கள் தெரிந்து கொண்டு இருப்பதால் பொருள் அறிய முடியவில்லை.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News