17 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் கருவுற்ற பெண்ணுக்கு காலாவதியான மருந்து: தமிழக அரசு மருத்துவமனையின் அவலம்!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 17 ஆண்டுகளாக பல கோயில்களில் வேண்டுதலுக்கு பின்னர் கருவுற்ற பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்து, மாத்திரைகளை கொடுத்துள்ள அலட்சியமான நிகழ்வு நடைபெற்றுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 17 ஆண்டுகளாக பல கோயில்களில் வேண்டுதலுக்கு பின்னர் கருவுற்ற பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்து, மாத்திரைகளை கொடுத்துள்ள அலட்சியமான நிகழ்வு நடைபெற்றுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே உள்ள ரெண்டாடி பகுதியைச் சேர்ந்தவர் அம்பிகா. இவருக்கு திருமணம் ஆகி கடந்த 17 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளார். இதனால் பல மருத்துவனைகள் மற்றும் கோயில்களில் சென்று வந்துள்ளார். இதன் பலனாக கருவுற்றுள்ளார். தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி அம்பிகாவுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன்பின்னர் வழக்கமாக செல்லும் கொடைக்கல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு பாரசிட்டமல், அமாக்சிலின், சி.பி.எம். உள்ளிட்ட பிற மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு சென்று பார்த்த அம்பிகா அந்த மாத்திரைகள் அனைத்தும் காலாவதியாகியிருப்பது கண்டுப்பிடித்துள்ளார். இது பற்றி அந்த மருத்துவமனையில் சென்று கேட்டபோது அங்குள்ள பணியாளர்கள் மிகவும் அலட்சியமாகவே பதில் கூறியுள்ளனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு புகார் கொடுத்துள்ளார். கடந்த 17 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் கருவுற்றுள்ள பெண்ணுக்கு இது போன்று அலட்சியமாக காலவதியான மாத்திரைகள் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Polimer