94 மழலைகளின் 17வது ஆண்டு நினைவு தினம்.!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா என்ற பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி பள்ளிக்கு குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர். அன்று காலை அந்த பள்ளியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பள்ளியில் இருந்த 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தது. அந்த சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியடைய செய்தது.

Update: 2021-07-16 06:06 GMT

கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 மழலைகள் உயிரிழந்து இன்றுடன் 17வது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா என்ற பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி பள்ளிக்கு குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர். அன்று காலை அந்த பள்ளியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பள்ளியில் இருந்த 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தது. அந்த சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியடைய செய்தது.

 அப்பள்ளியில் 900க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். தீ விபத்து ஏற்பட்டபோது உடனடியாக வெளியேறுவதற்கு சரியான வழி இல்லை. இதனால் 94 மழலை பிஞ்சுகள் தீயில் கருதி உயிரிழந்தனர். மேலும் 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தது.

இந்த தீ விபத்து நடந்து இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்து விட்டது. உயிரிழந்த குழந்தைகளின் 17ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை கிருஷ்ணா பள்ளி முன்பாக பெற்றோர்கள் ஒன்றாக கூடி 94 குழந்தைகளின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். 

குழந்தைகளுக்கு பிடித்தபாமன இனிப்பு வகைகள், துணிகள் மறறும் மாலை அணிவித்து, மலர் தூவி மெழுகுவர்த்திகளை ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News