தி.நிகர் : நகைக்கடையில் 2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை.!
தி.நிகர் : நகைக்கடையில் 2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை.!
சென்னை தியாகராயர் நகரில் பிரபலமான துணி கடைகள், நகை கடைகள் அனைத்தும் உள்ளன. இந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மக்கள் அதிகம் கூடுவதால் காவல் துறையினர் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
காவல் துறையினரையும் மீறி பல திருட்டு சம்பவம் நடக்கிறது. சென்னை தியாகராயர் நகரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் ராஜேந்திர பாபு என்பவர் மாம்பலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இது போன்ற சம்பவங்கள் இனி தொடராமல் இருக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். பல நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இதே போன்ற சம்பவம் இந்த பகுதியில் நடந்ததால் கடைக்காரர்கள் பீதியில் உள்ளனர்.