மதுரை: கொரோனா பாதுகாப்பு விதிமுறை மீறல்கள் - ₹2 கோடியை தாண்டிய அபராதம்!
மதுரை: கொரோனா பாதுகாப்பு விதிமுறை மீறல்கள் - ₹2 கோடியை தாண்டிய அபராதம்!
மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை அன்று கொரோனா தொற்றுநோய் பாதுகாப்பு விதி முறைகளைப் பின்பற்றாதவர்களிடம் இருந்த வசூலிக்கப்பட்ட அபராதம் இரண்டு கோடியைத் தாண்டியுள்ளது. மேலும் பண்டிகை காலத்தில் விழிப்புணர்வுகளை அதிகரிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த உருவெடுத்த கொரோனா தொற்றுநோயைப் பரவாமல் தடுக்க பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாதவர்களிடம் அபதாரங்களை மே மாதத்திலிருந்து வாங்க மாநில அரசு உத்தரவிட்டது. மதுரையில் மே மாதத்தில் வசூலிக்கப்பட்டாலும் அதிகாரப்பூர்வமாக ஜூன் 13 இல் உத்தரவிடப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள், வருவாய் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மற்றும் அனைவரும் முகக்கவசம் அணியாதவர்களைக் கண்காணித்து வருகின்றனர். தாசில்தார் தலைமையில் 10 பறக்கும் படை அமைத்துக் கண்காணிக்கப்படுகின்றது. முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதம் ₹100 இல் இருந்து ₹200 ஆக உயர்த்தப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளிடம் இருந்து ₹1000 அபராதம் வசூலிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறுவோர்களின் கட்டிடங்கள் சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.
அக்டோபர் 23 இல் மொத்தமாக வசூலிக்கப்பட்ட அபராதம் 2.04 கோடியைத் தாண்டியது. பண்டிகை காலங்களில் மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று Dr T G வினய் சனிக்கிழமை தெரிவித்தார். தமிழ்நாடு சுகாதார சட்டம் 1939 கீழ் பொது இடங்களில் துப்புபவர்களுக்கு ₹500 அபராதம் வாங்கப்படுகின்றது. சலூன், ஸ்பாக்கள் மற்றும் நிறுவனங்களில் SOPs விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களிடம் இருந்து ₹5000 வசூலிக்கப்படுகின்றது. சனிக்கிழமை அன்று மதுரை கப்பலூர் டோல் கேட்டில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ₹5000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி ஊழியர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் நடைமுறைகளைக் கண்காணித்து வருவது மிகவும் சிறந்தது என்று சமூக ஆர்வலர் V P மணிகண்டன் தெரிவித்தார். "பண்டிகை காலங்களில் நிலைமை மோசமடையும் என்பதைக் கேரளாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும், அதனால் மக்களிடம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தவேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார். "இன்னும் சில மக்கள் முகக்கவசங்களை பைகளில் வைத்துக்கொள்வது மற்றும் நாடிக்குக் கீழ் அணிவது போன்றவற்றைச் செய்து வருகின்றனர். அவர்கள் இது ஆபத்தான செயல்கள் என்று உணரவில்லை," என்று மருத்துவர் Dr N ராஜா தெரிவித்தார்.