போதை நகரமாகிறதா சென்னை: கஞ்சா விற்பனை செய்த 2 கல்லூரி மாணவர்கள் கைது!

Update: 2022-04-20 14:52 GMT

கஞ்சா விற்பனை செய்து வந்த கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியது. இதனால் டிஜிபி சைலேந்திரபாபு போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். கஞ்சா வியாபாரம் செய்பவர்களை கைது செய்ய வேண்டும். அவர்களின் சொத்தும் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் இரண்டு பேர் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவன் சந்தீப் மற்றும் சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கௌசிக் என்பவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் சென்னை போதை நகரமாகி வருவதாக பொதுமக்கள் அச்சப்பட்டுள்ளனர்.

படிக்கும் மாணவர்கள் கையில் கஞ்சா எப்படி வருகின்றது என்பதை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அப்போதுதான் இளம் மாணவர்கள் போதைக்கு அடிமையாவதில் இருந்து தடுக்க முடியும்.

Source: News 7 Tamil

Image Courtesy:Nakkheeran

Tags:    

Similar News