இன்று முதல் இலவசமாக 2 ஜிபி டேட்டா பேக்.. உற்சாகத்தில் கல்லூரி மாணவர்கள்.!

இன்று முதல் இலவசமாக 2 ஜிபி டேட்டா பேக்.. உற்சாகத்தில் கல்லூரி மாணவர்கள்.!

Update: 2021-02-01 08:38 GMT

தமிழகத்தில் படிக்கின்ற கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக 2ஜிநி டேட்டா பேக் தரும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. அப்படி பாடம் நடத்துவதை மாணவர்கள் கவனிப்பதற்கு போதுமான அளவு இண்டர்நெட் வசதி கிடையாது. இதற்காக மாணவர்கள் மாதத்திற்கு 350 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருந்தது. வசதி படைத்தவர்கள் ஆன்லைன் வகுப்பிற்கு நெட் பேக் போட்டுக்கொள்வார்கள். வசதி இல்லாத மாணவர்கள் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் கல்லூரி படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி டேட்டா பேக் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இலவசமாக 2ஜிபி டேட்டா பேக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.இதன் மூலமாக தினமும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா பேக் வழங்கப்படுகிறது. இந்த உத்தரவுக்கு கல்லூரி மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளது மட்டுமின்றி தமிழக முதலமைச்சருக்கும் நன்றியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News